சிறந்த பங்கு முதலீடு

ஒரு தள்ளுவண்டி காய்கறி வியாபாரி காய்கறி சந்தை செல்கிறார். அங்கு எந்தெந்த காய்கறிகள் விற்கப்படுகின்றன, காய்கறிகளின் சந்தை விலை எப்படி, காய்கறிகளின் தரம் எப்படி (வெண்டைக்காயை வளைப்பதன் மூலம் அதன் தரத்தை பரிசோதிப்பது, தேங்காயை தட்டிப் பார்ப்பதன் மூலம் அழுகலா இல்லையா என்று கண்டறிவது) , நாளை காய்கறிகளின் விலை கூடுமா அல்லது குறையுமா (உதாரணமாக, கனரக வாகன ஓட்டுனர்களின் வேலை நிறுத்தத்தால், காய்கறி விலை கூடும்), காய்கறிகள் சீக்கிரம் கெட்டுவிடக் கூடிய வகையா அல்லது பல நாட்கள் வைத்திருந்து விற்கலாமா, போன்ற விபரங்களின் மூலம், அவர் காய்கறி வாங்குவதை முடிவெடுக்கிறார். எப்படி தள்ளுவண்டி காய்கறி வியாபாரி, காய்கறிகளைப் பற்றியும், காய்கறிகளின் சந்தையைப் பற்றியும் தெரிந்தப் பிறகே காய்கறி வியாபரத்தில் இறங்குகிறாரோ, நாமும் அவ்வாறே பங்கு சந்தையை நன்றாக புரிந்துக் கொண்ட பின்னரே, பங்கு சந்தையில் பங்கெடுப்பதை முடிவு செய்ய வேண்டும்.
* Report this group X